சமந்தா போனில் 'லவ்' என்ற பெயரில் உள்ள நம்பர்! யாருடையது தெரியுமா?

சமந்தாவின் மொபைலில் 'Love' என்ற பெயரில் சேமிக்கப்பட்ட எண் வைரலாகியுள்ளது. அது அவரது அப்பா ஜோசப் பிரபுவின் எண் என்றும், அவர் சமந்தாவின் வாழ்க்கையில் பெரிய ஆதரவாக இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

Samantha has a number called 'Love' on her phone! Do you know who it belongs to? sgb

சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை. நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, அவரது மொபைலில் "Love" என்ற பெயரில் இருந்த எண் வைரலானது. அந்த எண் யாருடையது என்று தெரியுமா?

Samantha has a number called 'Love' on her phone! Do you know who it belongs to? sgb
Samantha ruth prabhu

சமந்தா 15 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்றத் இறக்கங்களைச் சந்தித்துள்ளார். நாக சைதன்யாவுடன் காதலித்து திருமணம் செய்த அவர், நான்கு வருடங்களில் விவாகரத்து செய்துகொண்டார்.


Samantha Love Contact Number

தற்போது, சமந்தாவின் மொபைலில் "Love" என்ற பெயரில் ஒரு நபர் சேமிக்கப்பட்டிருப்பது வைரலாகியுள்ளது. அந்த நம்பர் யாருடையது என்று நெட்டிசன்கள் ஆராய்ச்சியில் இறங்கினர். இந்நிலையில், அந்த எண் சமந்தாவின் அப்பாவுடைய நம்பர் என்று தெரியவந்துள்ளது.

சினிமாவில் வெற்றி அடைய அவரது குடும்பம் பெரிய ஆதரவாக இருந்துள்ளது என சமந்தா அடிக்கடி பேசியுள்ளார். குறிப்பாக அப்பா ஜோசப் பிரபு தன்னை தொடர்ந்து ஊக்குவித்து வந்தது பற்றியும் கூறியிருக்கிறார். சமந்தாவின் ஆரம்பகால வாழ்க்கையில் முக்கியமான நபராக இருந்திருக்கிறார்.

ஆங்கிலோ-இந்தியரான ஜோசப் பிரபு 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் மரணம் அடைந்தார். இதனால் மிகவும் மனம் உடைந்து போயிருந்த சமந்தா, அப்பாவின் நினைவாக இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்திருந்தார். "அப்பா... உங்களைப் போல வேறு யாரும் இல்லை. நீங்கள் இல்லாதது இந்த வாழ்க்கையில் பெரிய வெற்றிடமாக உள்ளது..." என்று பதிவிட்டிருந்தார்.

Latest Videos

vuukle one pixel image
click me!