துணை இயக்குனராக சினிமாவில் கேரியரை துவங்கி, தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ள, மணிகண்டன் நடிப்பில், வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில், 50 ஆவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பா ரஞ்சித் படத்தில் மணிகண்டன்
இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மணிகண்டன் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குநர் புஷ்கர் காயத்ரி, மணிகண்டன் குறித்து முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளனர்.
மணிகண்டன் தான் அடுத்த விஜய் சேதுபதியா?
மணிகண்டன் இப்போது விஜய் சேதுபதி போல் ஒரு எதார்த்தமான நடிகராக வளர்ந்துள்ளார். என்னுடைய இயக்கத்தில் அவர் நடித்தது இல்லை என்றாலும், நான் இயக்கிய 'விக்ரம் வேதா' படத்திற்கு அவர் தான் வசனம் எழுதி இருந்தார். மிகவும் திறமையானவர். அவர் வைத்து படம் இயக்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். எனக்கு தெரிந்தே 100 கதைகள் அவரின் கைவசம் உள்ளது. ஆனால் தனக்கு பொருந்த கூடிய கதைக்களத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
எங்க வீட்டுலையே என்ன Kidnap பண்ணி அங்க தூக்கிட்டு போனாங்க; ஷாக் கொடுத்த நடிகர் மணிகண்டன்!
மணிகண்டன் பற்றி புஷ்கர் காயத்திரி
அவருக்கு தேவை கதை மட்டும் தான். கதை நன்றாக இருந்தால் புதுமுக இயக்குநர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அனுபவம் பற்றியும் யோசிக்க மாட்டார். உடனே ஓகே சொல்லி விடுவார். சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி, நிஜத்திலும் மிகவும் எதார்த்தமான மனிதர். அடுத்த விஜய் சேதுபதி மணிகண்டன் என்று கூட சொல்லலாம். அவருக்கு இருக்கும் அனுபவம் தான் இப்போது அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க காரணம் என வெகுவாக பாராட்டியுளளார்.