Published : Mar 20, 2025, 05:14 PM ISTUpdated : Mar 20, 2025, 05:17 PM IST
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா, டேட்டிங் செய்தி வெளியானதில் இருந்தே பல காரணங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். தற்போது இவர்கள் முதல் முறையாக கொடுத்துள்ள நேர்காணலில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சமந்தாவை விவாகரத்து செய்த, ஒரே வருடத்தில் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவரும் தங்களின் உறவு பற்றி அதிகார பூர்வமாக அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகில் பேசு பொருளாகவும் மாறியது.
அதே நேரம் இவர்கள் இருவரும் பல காரணங்களுக்காக கடுமையாக விமர்சனங்களை சந்தித்தனர். சமந்தா விவாகரத்துக்கு சோபிதா தான் காரணம் என ரசிகர்கள் கூறிய நிலையில், இதை நாகசைதன்யா முற்றலும் மறுத்தார்.
25
பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் Vogue இதழுக்காக நாக சைதன்யா மற்றும் சோபிதா எடுத்து கொண்ட போட்டோஷூட் மற்றும் அவர்கள் கொடுத்த பேட்டி மீண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
Vogue உடனான உரையாடலில், நாக சைதன்யாவிடம் ''ஷோபிதா துலிபாலாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது'' . அதற்கு அவர் “அவர் பேசும் தெலுங்கு மொழி தான். என்னுடைய குடும்பத்தினரும் தெலுங்கு பேசுவார்கள். ஆனால் நான் சென்னையில் படித்தேன் என்பதால் படிக்கும் காலங்களில் தமிழ் தான் பேசினேன். வீட்டில் ஆங்கிலம் பேசுவார்கள் - அதனால் என் தெலுங்கு அவருடையது போல் இருக்காது. அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். அவர் தெலுங்கில் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
இதற்க்கு ஷோபிதா தனது கணவருடன், தெலுங்கில் பேசுவது எப்படி இருக்கிறது என்கிற அனுபவத்தை கூறினார். நான் “மும்பையில், பல வருடங்கள் வசித்து வந்ததால், மற்ற மொழிகளைப் பேசப் பழகிவிட்டேன். என் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைத் தவிர வேறு ஒருவருடன் தெலுங்கில் பேசுவது எப்படி இருக்கும் என்பதை நான் மறந்துவிட்டேன் என சொல்லலாம். நான் வீடாக நினைக்கும் ஒரு மொழியில் அவரிடம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.
45
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா தொழில் வாழ்க்கை:
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா தொழில் வாழ்க்கை:
தங்களின் நடிப்பு வாழ்க்கை மற்றும் பிற விஷயங்கள் குறித்து பேசிய நாக சைதன்யா, குடும்பத்துடன் சாப்பிடுவது, எதுவும் செய்யாமல் இருவரும் நீண்ட நேரம் தெலுங்கில் பேசி அரட்டை அடிப்பது போன்றவை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இருவருமே நடிப்பில் பிசியாக இருந்தாலும், உங்களுக்கென நேரம் செலவிட முன்பே திட்டமிடுவோம். இதனால் எங்களின் படமும் பாதிக்கப்படுவதில்லை. நாங்களும் ஒதுக்கிய நேரத்தில் ஒன்றாக ஜில் செய்கிறோம் என கூறியுள்ளனர்.
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த பேட்டியில் நாக சைதன்யா கூறியதை வைத்து, ஒரு மொழியை நன்றாகப் பேசுகிறார் என்பதற்காக திருமணம் செய்வது மிகவும் வேடிக்கையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
சமந்தா ரசிகைகள் நாக சைதன்யாவை 'Manipulator' என்று அழைக்கிறார்கள், ஏனெனில் சமந்தாவும் தெலுங்கு பேசினார், மேலும் அவரும் புத்திசாலி. நாக சைதன்யா சமந்தாவை பற்றி ஏன் இப்படி பேசியதில்லை என பாய்ண்டாக பேசி, வழக்கம் போல் சோபிதா தான் சமந்தா திருமண முறிவுக்கு காரணம் என வசைபாடி வருகிறார்கள்.