ரஜினிக்கு முடிவெட்ட 1 லட்சம் வாங்கும் சலூன் கடைக்காரர்; யார் இந்த ஆலிம் ஹக்கீம்?

Published : Mar 20, 2025, 03:51 PM ISTUpdated : Mar 20, 2025, 03:54 PM IST

சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர், இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இவரிடம் முடிவெட்ட வரிசையில் காத்திருக்கிறார்களாம்.

PREV
15
ரஜினிக்கு முடிவெட்ட 1 லட்சம் வாங்கும் சலூன் கடைக்காரர்; யார் இந்த ஆலிம் ஹக்கீம்?

Aalim Hakim charges rs 1 lakh for hair cutting : ஆலிம் ஹக்கீம் பெயரை பலரும் அறிந்திருப்பார்கள். பிரபலங்களின் ஹேர் டிரெஸ்ஸரான ஆலிம் ஹக்கீம் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேர் டிரெஸ்ஸராக உள்ளார். ஹேர் ஸ்டைல் மூலம் வித்தியாசமான தோற்றத்தை அளிக்கக்கூடிய திறன் ஆலிம் ஹக்கீமிற்கு உள்ளது. ரஜினிகாந்த், ஷாருக் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் முதல் விராட் கோலி, எம்.எஸ். தோனி வரை அனைத்து பிரபலங்களும் ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்து கொள்கிறார்கள். இவர்களிடம் ஆலிம் ஹக்கீம் ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்.

25
Hair Stylist Aalim Hakim

ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்து கொள்ள பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்குகிறார்கள். கூடவே 1 லட்சம் ரூபாயும் கொடுக்கிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர் ஸ்டைல் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வயதானவர்களை கூட இளைஞர்கள் போல் மாற்றுகிறார். பிரபல ஹேர் டிரெஸ்ஸரான ஆலிம் ஹக்கீம் இப்போது 1 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் ஆலிம் ஹக்கீம் தனது பயணத்தை தொடங்கியது வெறும் 20 ரூபாயில் இருந்து.

35
Aalim Hakim With Rajinikanth

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆலிம் ஹக்கீம் தனது அற்புதமான பயணத்தைப் பற்றி கூறியுள்ளார். தான் வெறும் 20 ரூபாயில் ஹேர் கட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கூறினார். ஆலிம் ஹக்கீமிற்கு 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை இறந்துவிட்டார். ஆலிம் ஹக்கீமின் தந்தை பாலிவுட் ஹீரோக்களுக்கு ஹேர் கட்டிங் செய்து வந்தார். ஷோலே, ஜன்சீர், டான் உட்பட பல படங்களில் நடிகர்களுக்கு ஹேர் கட்டிங், ஸ்டைல் ​​மூலம் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்...ராதிகா வந்தாலே செருப்பை பார்ப்பாராம் ரஜினி; பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?

45
Aalim Hakim, Dhoni

திடீரென தந்தை இறந்ததால் குடும்பம் தெருவுக்கு வந்தது. காரணம் தந்தை இறந்தபோது அவரது கணக்கில் 13 ரூபாய் மட்டுமே இருந்தது என்று ஆலிம் ஹக்கீம் கூறியுள்ளார். இதனால் குடும்பப் பொறுப்பை ஏற்க ஹேர் கட்டிங் செய்யத் தொடங்கினார். முதல் ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் நிர்ணயித்து ஆரம்பித்தேன் என்று ஆலிம் ஹக்கீம் கூறினார்.

ஹேர் கட்டிங் மற்றும் ஷாம்பூ போட்டு சுத்தம் செய்ய 30 ரூபாய் வசூலித்தார். பின்னர் மெதுவாக ஹேர் கட்டிங் கடையில் ஏசி பொருத்தி 50 முதல் 75 ரூபாய் வரை வசூலித்தார். 

55
Aalim Hakim, Kohli

பிறகு படிப்படியாக பாலிவுட்டில் மிகப்பெரிய ஹேர் டிரெஸ்ஸராக வளர்ந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட தென்னிந்திய படங்களிலும் ஹேர் டிரெஸ்ஸராக பணியாற்றியுள்ளார்.

ஆலிம் ஹக்கீம் இந்திய அணியின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஹேர் கட்டிங் செய்துள்ளார். எம்.எஸ். தோனி ஒவ்வொரு தொடர், ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் புதிய ஹேர் ஸ்டைலில் தோன்றுவார். இதன் பின்னணியில் இருப்பது ஆலிம் ஹக்கீம்தான். விராட் கோலியும் பலமுறை ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... T Rajendar: நடிக்க முடியாதுனு கைவிரித்த ரஜினி; தானே ஹீரோவாக களத்தில் இறங்கி ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!

Read more Photos on
click me!

Recommended Stories