பற்றி எரியும் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.!! ஜீவனாம்சமாக இவ்வளவு பெரிய தொகையா?

Published : Sep 22, 2021, 07:44 PM ISTUpdated : Sep 22, 2021, 07:49 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் தீயாக எரிந்து கொண்டிருக்கும் சமந்தா (Samantha Akkineni ) மற்றும் நாக சைதன்யா (Naga Chaitanya ) விவாகரத்து குறித்தும் இதற்காக சமந்தா மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்பதாகவும் ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது.  

PREV
16
பற்றி எரியும் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.!! ஜீவனாம்சமாக இவ்வளவு பெரிய தொகையா?

கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இதுவரை, கணவன் - மனைவி இருவருமே அமைதி காத்து வருவதால்
பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

26

மேலும் சமந்தா ஹிந்தியில் நடித்த 'தி பேமிலி மேன் 2 ' வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, சில பாலிவுட் வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியதால், மும்பை செல்ல இவர் திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா அவருடைய தந்தையுடன் வசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

 

36

அதே போல் சமந்தா கடந்த மாதம் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவின் (Nagarjuna ) பிறந்தநாள் பார்ட்டியில் மிஸ் ஆனது, இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருந்தது.

 

46

சமந்தா - சைதன்யா இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகவே கூறப்பட்டது.

 

56

தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதாக ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் சைதன்யாவை விவாகரத்து செய்ய சுமார் 50 கோடி வரை சமந்தா ஜீவனாம்சம் பெறுவார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

 

66

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது வழக்கம் போல் வதந்தியாக கடந்து போகுமா? அல்லது விவாகரத்து குறித்து சமந்தா - நாக சைதன்யா வாய் திறப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

click me!

Recommended Stories