பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா? போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இதோ..!!

Published : Sep 22, 2021, 05:31 PM ISTUpdated : Sep 22, 2021, 05:55 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 (biggboss tamil 5) எப்போது துவங்கப்போகிறது என்கிற அதிகார பூர்வ தகவல் வெளியானதில் இருந்தே, இந்த நிகழ்ச்சியில் யார் யார் உள்ளே செல்ல உள்ளனர் என்பது குறித்த பரபரப்பு பற்றி கொண்டது. அந்த வகையில் தற்போது அவ்வப்போது ஒவ்வொரு பிரபலங்களின் பெயர்களும் வெளியாகி வருகிறது. இது குறித்த விவரம் இதோ...  

PREV
18
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா? போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இதோ..!!

பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள்.

 

28

வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.

 

38

முன்பில் இதே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானாலும், பின்னர் அதில் உண்மை இல்லை என கூறப்பட்டது. அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து (GP Muthu), பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சம்யுக்தாவின் (Samyuktha) தோழி ப்ரதாயினி  ஆகியோர் பிக்பாஸ் லிஸ்டில் இடம்பெற்றாலும் பின்னர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.

 

48

தற்போது பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பட்டியலில், 'குக் வித் கோமாலி' கனி (cook with comali kani), சுனிதா (sunitha) மிலா (mila) (நடிகை ஷகீலாவின் மகள்), 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் (abinay), வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, '90 எம்எல் 'புகழ் மசூம் சங்கர், 'மைனா' பட புகழ் சுசேன் ஜார்ஜ் (suzan George) உள்ளிட்ட பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

 

58

அதே போல் விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்கா (Priyanka) பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் (super singer) உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் இருந்து விலகியுள்ளார் என்கிற தகவல் தீயாக பரவியது.

 

68

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக யூகிக்க படும் பட்டியலில் 'கண்மணி' சீரியல் புகழ் லீஷா எக்லேர்ஸ் (leesha)  'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய், நடிகை பானுப்ரியா, (banupriya) 'பாய்ஸ்' நடிகர் மணிகண்டன் (Manikandan), 'கழுகு' நடிகர் கிருஷ்ணா (krishna), பயில்வான் ரங்கநாதன் (bayilwan Ranganathan) மற்றும் 'மைனா' நந்தினி  (Nandhini) ஆகியோரும் உள்ளனர், ஆனால் இவர்கள் செல்கிறீர்களா என்பது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

78

எனினும் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி தம்பதிகளின் பேரனும், ராமானுஜம், சென்னை 28 , பரமபத விளையாட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபிநய் (abinay) பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

 

 

88

இப்படி நீண்டு கொண்டே செல்லும் லிஸ்டில் யார் யார் உள்ளே செல்ல உள்ளனர், என்பதை அக்டோபர் 3 ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

click me!

Recommended Stories