திரைப்பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், தன்னுடைய வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன மியா, அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகிய குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.