நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

Published : Sep 22, 2021, 12:06 PM IST

நடிகை சமந்தாவே ஒரு பேட்டியில், நாக சைதன்யாவிற்கு நான் இரண்டாவது மனைவி என்று கூறியுள்ளார்... அப்போ அந்த முதல் மனைவி யார் என்கிற விவரத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...  

PREV
16
நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

நடிப்பு, மாடலிங், வெப் சீரிஸ் என தொடர்ந்து தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக தனி பட்ட வாழ்க்கையை குறித்தும், பல்வேறு வதந்திகளில் சிக்கி வருகிறார்.

 

26

அந்த வகையில் சமந்தா மும்பைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா... சமந்தாவை பிரிந்து, தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

 

36

சமந்தா - நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் நாக சைத்தாயா வாய் திறக்காமல் இருப்பது மேலும் பல வதந்திகளுக்கு வழி வகுத்து வருகிறது.

 

46

இது ஒரு புறம் இருக்க... சமந்தாவும், நாக சைதன்யாவும் சந்தோஷமாக இருந்த போது, இருவரும் சேர்ந்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது சமந்தா நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி என தெரிவித்திருந்தார்.

 

56

நாக சைதன்யாவுக்கு மிகவும் பிடித்தது அவரது தலையணை தான் என்றும், இருவரும் தூங்கும் போது தலையணை தங்களது நடுவில் இருக்கும் எனவே அது தான் அவரது முதல் மனைவி என சமந்தா கலகலப்பாக கூறி இருந்தார்.

 

66

பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய அரட்டை நிகழ்ச்சியின் போது தான் சமந்தா, தங்களது படுக்கையறை ரகசியத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!

Recommended Stories