salman khan :சூப்பர்ஸ்டார் மீதுள்ள நட்புக்காக நடிச்சேன்... காசு வேணாம்- ரூ.20 கோடியை வாங்க மறுத்த சல்மான் கான்

Ganesh A   | Asianet News
Published : Mar 25, 2022, 10:32 AM IST

salman khan : காட்ஃபாதர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சல்மான் கான் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. 

PREV
14
salman khan :சூப்பர்ஸ்டார் மீதுள்ள நட்புக்காக நடிச்சேன்... காசு வேணாம்- ரூ.20 கோடியை வாங்க மறுத்த சல்மான் கான்

ஹிட்டான லூசிபர்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் லூசிபர். இப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கி இருந்தார். அவர் இயக்கிய முதல் படம் இதுதான். மோகன்லால் உடன் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

24

தெலுங்கில் ரீமேக் ஆகிறது

இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி உள்ளார். இவர் தமிழில் ஜெயம், எனக்கும் உனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போன்ற பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார்.

34

காட்ஃபாதர் ஷூட்டிங்

இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காட்ஃபாதர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

44

கெஸ்ட் ரோலில் சல்மான் கான்

இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சல்மான் கான் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் சல்மான் கானுக்கு ரூ.20 கோடியை படக்குழு சன்மானமாக கொடுத்துள்ளது. ஆனால் இதனை வாங்க மறுத்த சல்மான் கான், சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி மீதுள்ள நட்பின் காரணமாகத் தான் இப்படத்தில் நடித்ததாகவும், இதற்காக காசெல்லாம் வேண்டாம் என்றும் கூறி படக்குழுவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினாராம்.

இதையும் படியுங்கள்.... RRR movie Review : ராஜமவுலி சாதித்தாரா?... சோதித்தாரா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்

Read more Photos on
click me!

Recommended Stories