vetrimaran : இந்த உலகத்தில் மய்யம் என்று ஒன்று கிடையாது - பட விழாவில் அரசியல் பேசி அதிர வைத்த வெற்றிமாறன்

Ganesh A   | Asianet News
Published : Mar 25, 2022, 07:49 AM IST

vetrimaran : இந்த உலகத்தில் நடப்பதைத் தான் நாங்கள் திரைப்படங்களில் காட்ட முடியும் என்றும் ஒருவேளை இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்களை எடுக்கலாம் எனவும் வெற்றிமாறன் கூறினார்.

PREV
15
vetrimaran : இந்த உலகத்தில் மய்யம் என்று ஒன்று கிடையாது - பட விழாவில் அரசியல் பேசி அதிர வைத்த வெற்றிமாறன்

தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம், இவரை முன்னணி இயக்குனராக உயர்த்தியது. இப்படத்துக்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்தன.

25

இதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் தனுஷை வைத்து வடசென்னை மற்றும் அசுரன் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய வெற்றிமாறன். அடுத்ததாக விடுதலை, வாடிவாசல் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

35

இதில் விடுதலை  படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி  முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

45

இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் கேரளாவின் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய அரசியல் பேச்சு வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: பிளவுபட்டுள்ள இன்றைய உலகத்தில் உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஒன்று இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. மய்யம் என்று சொல்பவர்களும் வலதுசாரியை ஆதரிப்பவர்கள் என்பது தான் அர்த்தம். ஆனால் அதைத் தேர்வு செய்வதற்கான நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். 

55

இந்த உலகத்தில் நடப்பதைத் தான் நாங்கள் திரைப்படங்களில் காட்ட முடியும். ஒருவேளை இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்களை எடுக்கலாம். ஒரு இயக்குனர் என்பவர் அரசியல்வாதியோ, விஞ்ஞானியோ இல்லை. அவர் ஒரு கலைஞர் மட்டுமே. எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. தான் வாழ்ந்த உலகில் பார்ப்பதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார்”. இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.

இதையும் படியுங்கள்.... RRR movie Review : ராஜமவுலி சாதித்தாரா?... சோதித்தாரா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories