பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியாவில் தனி மவுசு உண்டு. முதன்முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடத்தப்பட்டு அங்கும் பிரபலமடைந்தது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இந்நிகழ்ச்சி 5 சீசன்கள் மட்டுமே முடிந்துள்ளன. ஆனால் இந்தியில் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. இந்த சீசன்களையெல்லாம் தொகுத்து வழங்கியது பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான். விரைவில் தொடங்கப்பட உள்ள 16-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவருக்கு கடந்த சீசன் இந்த அளவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகும் முடிவில் இருந்த அவரை அதிக சம்பளம் கொடுத்து வளைத்துபோட்டது பிக்பாஸ் குழு.
இந்த முறை பிக்பாஸ் குழு 16-வது சீசனை தொகுத்து வழங்க அழைத்தபோது, தான் வரவில்லை என மறுத்தாராம். ஆனால் அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடாமல் துரத்தியதால் ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன் என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் சல்மான். இதற்கு ஓகே சொல்லி உள்ளது பிக்பாஸ் குழு. இருந்தாலும் சல்மான் கான், இதற்கு சம்மதிக்காததால், தற்போது அவருக்கு பதில் வேறு தொகுப்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளனர். பிரபல இந்தி இயக்குனர் ரோகித் ஷெட்டியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
இதையும் படியுங்கள்... கிளாமராக போட்டோஷூட் நடத்தி கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரேமம் நாயகி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்