சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் இவர், கடந்த 2020-ம் ஆண்டு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது இவர் கைவசம் சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, விக்ரம் பிரபு ஜோடியாக பாயும் ஒளி நீ எனக்கு, பரத் உடன் லவ், கவினின் ஊர்க்குருவி, பிரபுதேவா ஜோடியாக ரேக்ளா உள்பட டஜன் கணக்கிலான படங்களை வைத்துள்ளார். இதுதவிர மேலும் சில பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
இதே நிலை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை அஞ்சலிக்கும் நடந்தது. நடிகர் ஜெய், அஞ்சலியை காதலித்தபோது அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அவர் இந்த காட்சியில், நடிக்க மாட்டார், அந்த காட்சியில் நடிக்க மாட்டார் என்று சொல்லி அட்ராசிட்டி செய்து வந்தாராம். நடிகை அஞ்சலியின் மார்க்கெட் சரிந்ததற்கும் இதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது அதே போன்ற நிலைமை தான் வாணி போஜனுக்கும் நடந்து வருகிறது. வாணி போஜன் கதை கேட்கும் போது நடிகர் ஜெய் பக்கத்தில் இருப்பதால அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். இந்த நிலை தொடர்ந்தால் அது நடிகை வாணி போஜனின் கெரியருக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது. பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் ஜெய்யும் வாணி போஜனும் ஏற்கனவே ட்ரிபிள்ஸ் என்கிற வெப்தொடரில் ஜோடியாக நடித்துள்ளனர். அதுதவிர தற்போது ஒரு படத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்