நிர்வாண காட்சிக்கு கத்திரி போட்டும் ஏ சான்றிதழ்... ஷாக் ஆன மிஷ்கின் - ‘பிசாசு 2’ல அப்படி என்ன தான் இருக்கு..?

First Published | Aug 30, 2022, 9:56 AM IST

Pisasu 2 : ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சியை தூக்கிய பிறகும் பிசாசு 2 படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதால் இயக்குனர் மிஷ்கின் ஷாக் ஆகிப்போய் உள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பிசாசு 2. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை பூர்ணா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிசாசு 2 படத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு படத்திற்கு போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்காததே காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் விக்ரமின் கோப்ரா படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதால் பிசாசு 2 படத்தை தள்ளிவைத்து விட்டார்களாம்.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக தேசிய விருது வென்ற நடிகையுடன் கூட்டணி அமைத்த ஜெயம் ரவி... வைரலாகும் ‘சைரன்’ மோஷன் போஸ்டர்

Tap to resize

இதுதவிர பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சி நீக்கப்பட்டது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த மிஷ்கின், தான் நிர்வாணக் காட்சியை படமாக்கவில்லை என்றும், அவரை நிர்வாணமாக போட்டோஷூட் மட்டுமே எடுத்ததாகவும், அதையும் தான் எடுக்கவில்லை, ஆண்ட்ரியாவின் நண்பர் எடுத்ததாகவும் விளக்கம் அளித்தார். அந்த காட்சி இருந்தால் குழந்தைகள் படத்தை பார்க்க முடியாது என்பதால் அதனை படத்தில் வைக்கவில்லை என மிஷ்கின் கூறி இருந்தார்.

அந்த நிர்வாணக் காட்சியை தூக்கிய பிறகும் தற்போது பிசாசு 2 படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாம் சென்சார் போர்டு. படத்தில் திகிலூட்டும் காட்சிகள் அதிகம் இருப்பதனால் ஏ சான்றிதழ் தான் வழங்க முடியும் என சொல்லிவிட்டார்களாம். இதனால் ஷாக் ஆன மிஷ்கின், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு/ஏ சான்றிதழ் பெறும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ரஜினிக்குன்னு ஸ்பெஷலா எதுவும் இல்ல... 1200 பேருக்கு சமைக்குறத தான் அவரும் சாப்பிடுவார் - சூப்பர்ஸ்டாரின் எளிமை

Latest Videos

click me!