விக்ரமின் கோப்ரா படத்துக்கும் அதிகாலை 4 மணி காட்சி ரத்து...! FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

Published : Aug 30, 2022, 08:24 AM IST

Cobra movie : தமிழில் கடந்த சில வாரங்களாக ரிலீசான விருமன், திருச்சிற்றம்பலம் போன்ற பெரிய படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படாத நிலையில், விக்ரமின் கோப்ரா படத்தின் FDFS குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
விக்ரமின் கோப்ரா படத்துக்கும் அதிகாலை 4 மணி காட்சி ரத்து...! FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தார். வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

25

இதையடுத்து நயன்தாரா உடன் கூட்டணி அமைத்த அஜய் ஞானமுத்து, அவரை வைத்து இமைக்கா நொடிகள் எனும் திரில்லர் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து அடுத்ததாக விக்ரம் உடன் கூட்டணி அமைத்தார்.

35

இவர்கள் கூட்டணியில் உருவாகி உள்ள படம் கோப்ரா. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை கடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மிருணாளினி ரவி, மீனாட்சி, ஸ்ரீநிதி ஷெட்டி, பூவையார், ரோஷன் ஆண்ட்ரூஸ், இர்பான் பதான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்துடன் இமயமலைக்கு பைக் ட்ரிப் சென்ற அதிமுக கவுன்சிலர்.... வைரலாகும் போட்டோஸ்

45

கோப்ரா திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வந்தது. கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

55

கடந்த சில வாரங்களாக தமிழில் ரிலீசான விருமன், திருச்சிற்றம்பலம் போன்ற பெரிய படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படவில்லை. இதனால் கோப்ரா படத்துக்கும் அதிகாலை காட்சி திரையிடப்படுமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. சமீபத்திய தகவல்படி கோப்ரா படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி இல்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்

Read more Photos on
click me!

Recommended Stories