பறிபோன பல உயிர்கள்.. இயக்குனர் பாலச்சந்தரை முடக்கிய கண்ணதாசனின் அந்த ஒரு பாடல்!

First Published | Sep 7, 2024, 10:28 PM IST

Director Balachander : இன்றும் தமிழ் சினிமாவில் தங்கள் ஆளுமையை நிரூபித்து வரும் இரு மாபெரும் கலைஞர்களின் குரு தான் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.

Legend Nagesh

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் என்கின்ற மூன்று மாபெரும் நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த காலத்தில், பல ஸ்டீரியோ டைப்புகளை உடைத்து எறிந்து, சிறு சிறு நடிகர்களை மட்டுமே வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தான் கே. பாலச்சந்தர். ஒரு படத்திற்கு திரைக்கதையின் ஆழமும், அதில் நடிக்கும் நடிகர்களின் திறமை மட்டுமே அவசியம், அந்த நடிகர்கள் மிகவும் புகழ்மிக்க நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபித்த முதல் தமிழ் இயக்குனர் கே. பாலச்சந்தர். 

கடந்த 1965ம் ஆண்டு வெளியான "நீர்க்குமிழி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக இவர் தமிழ் திரை உலகில் களம் இறக்கினார். அதுவரை காமெடியனாக மட்டுமே தமிழ் திரை உலகில் பார்க்கப்பட்ட நாகேஷை மாறுபட்ட வேடத்தில் தனது திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் நாகேஷ் என்று இந்த மூவரை வைத்து மட்டுமே பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.

இதனால் தான் அவர் "ஆண்டவர்".. 69 வயதிலும் அமெரிக்காவிற்கு படிக்கச்சென்ற கமல் - பரபரப்பு தகவல்!

Kamalhaasan

திரைத்துறையில் களம் இறங்குவதற்கு முன்பாக பல மேடை நாடகங்களை போட்டு வந்த இயக்குனர் பாலச்சந்தர், அந்த நாடகங்களை பிற்காலத்தில் திரைப்படங்களாகவும் இயக்கியது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ் திரை உலக பொருத்தவரை 50 ஆண்டுகளையும் கடந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும், இளம் நடிகர்களுக்கு போட்டியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவர்களுடைய குரு பாலச்சந்திரிடம் அவர்கள் கற்றுக் கொண்ட பாடம் தான். 

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே. பாலச்சந்தர், கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான பொய் என்கின்ற திரைப்படத்தை தான் இறுதியாக இயக்கியிருந்தார். நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர், இறுதியாக நடித்தது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "உத்தம வில்லன்" என்கின்ற திரைப்படத்தில் தான்.

Latest Videos


Director K Balachander

ஆனால் அந்த திரைப்படம் அவருடைய மறைவுக்கு பிறகு வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திரைப்படங்களுக்காக எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள இயக்குனர் பாலச்சந்தர், கடந்த 1980ம் ஆண்டு இயக்கிய ஒரு திரைப்படம் தான் "வறுமையின் நிறம் சிவப்பு". உலகநாயகன் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக மாறியது. குறிப்பாக கண்ணதாசன் வரிகளில் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகியை குரலில் ஒழித்த "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" என்ற பாடல் தான் அது. ஆனால் இந்த பாடலுக்கு பின் ஒரு மிகப்பெரிய சோகம் ஒளிந்து இருக்கிறது என்று தகவல் நம்மில் பல பேருக்கு தெரியாது.

Varumaiyin Niram sivappu

இந்த "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" என்ற பாடலை படமாக்க காஷ்மீர் அருகே உள்ள ஒரு இடத்திற்கு பட குழு சென்றுள்ளனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் இந்த பாட்டினுடைய படப்பிடிப்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து அங்கிருந்து இரண்டு வண்டிகளில் பட குழுவினர் மீண்டும் புறப்பட்டுள்ளனர். அப்போது பின்னே வந்த வண்டியில் பாலச்சந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் இருக்க, முன்னே சென்ற வண்டியில் பல பட குழுவினர் பயணம் செய்திருக்கின்றனர். 

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரவையில் சிக்கி, முன்னே சென்ற அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பலர் அந்த விபத்தில் பலியாகி உள்ளனர். இதனால் பல மாதங்கள் தன்னால் அடுத்த கட்ட பணியை செய்ய முடியாமல் முடங்கி இருந்த பாலச்சந்தரை, அந்த திரைப்பட குழுவினர் தேற்றி அதன் பிறகு அந்த திரைப்படத்தை வெளியிட வைத்துள்ளனர்.

சர்ச்சையை விலைக்கு வாங்கிய டாப் ஹீரோக்களின் 5 பாடல்கள்!

click me!