தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஆதி. சமீபகாலமாக இவர் அதிகளவில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆதி. தற்போது தமிழைவிட தெலுங்கில் தான் அதிகளவிலான படங்களில் நடித்து வருகிறார் ஆதி.
நடிகர் ஆதிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் வெற்றிபெற்று தற்போது இருவரும் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... வேள்பாரியில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்ட ஷங்கர்... சன் பிக்சர்சால் நடந்த டுவிஸ்ட்
ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி குறித்து ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.