வேள்பாரியில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்ட ஷங்கர்... சன் பிக்சர்சால் நடந்த டுவிஸ்ட்

First Published | Nov 17, 2022, 8:17 AM IST

வேள்பாரி கதையை படமாக எடுத்த முடிவு செய்ததும், அப்படத்தில் நடிகர் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் ஆசைப்பட்டாராம். 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் ஆர்.சி 15 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார் ஷங்கர். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்த பின்னர் அடுத்ததாக வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வெற்றி கண்டதால், அதே பார்முலாவை பின்பற்ற திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேஷன் எழுதிய வேள்பாரி நாவலை மையமாக வைத்து வரலாற்று படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கான உரிமையை வாங்கி ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 1000 கோடி பட்ஜெட் படம்..சூர்யா, யாஷுக்கு நோ சொல்லிவிட்டு ‘வேள்பாரி’யாக நடிக்க இந்தி நடிகரை களமிறக்கும் ஷங்கர்?

Tap to resize

இப்படத்தில் நடிக்கும் நடிகர் பட்டியலில் முதலில் சூர்யா மற்றும் யாஷ் பெயர் உலாவியது. பின்னர் இறுதியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் ஷங்கர் தமிழ் ஹீரோவை நடிக்க வைக்காதது ஏன் என்கிற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்நிலையில், அதற்கு விடையும் கிடைத்துள்ளது. அதன்படி வேள்பாரி கதையை படமாக எடுத்த முடிவு செய்ததும், நடிகர் விஜய்யை தான் அப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் ஆசைப்பட்டாராம். அதோடு இப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தான் முதலில் அணுகி இருந்தாராம். ஆனால் அவர்களோ படத்தின் பட்ஜெட்டை கேட்டு சற்று ஜகா வாங்கியதால், பாலிவுட் தயாரிப்பாளரை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம் ஷங்கர்.

இதையும் படியுங்கள்... விக்ரம் பட வெற்றிக்கு பின் மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி... சுட சுட வந்த கமல்ஹாசனின் அடுத்த பட அப்டேட்

Latest Videos

click me!