விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், வேட்டையாடு விளையாடு 2 என கமல்ஹாசனின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கமல். இப்படத்தின் கதைக்களம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தாலும் இதில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது.