கண்ணே பட்டுடும்... செம்ம கியூட்! இதுவரை யாரும் பார்த்திடாத குழந்தை பருவ அரிய புகைப்படங்களை வெளியிட்ட க்ஷெரின்!

First Published | Nov 16, 2022, 10:06 PM IST

பிக்பாஸ் ஷெரின் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத தன்னுடைய, குழந்தை பருவ அரிய புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஷெரின். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படம், இளவட்ட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் நாயகியாக இருந்த ஷெரினுக்கும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து நடிகர் சிபி ராஜ் ஹீரோவாக அறிமுகமான 'ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார்.மேலும் 'விசில்' படத்தில் வில்லியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, மிரளவைத்தார்.

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள் 'தளபதி 67' படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை பல கோடிக்கு தட்டி தூக்கிய நிறுவனம்!

Tap to resize

கவர்ச்சிக்கு குறை வைக்காத நாயகியாக ஷெரின் இருந்தபோதிலும், இவர் நடித்த படங்கள் பெரிய அளவிற்கு ரீச் ஆகாததால்... ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒரு சில காரணங்களால், திரையுலகில் சில வருடங்கள் தலைகாட்டாமல் இருந்த ஷெரின், கொழுக்கு... மொழுக்கு என மாறி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். ஸ்லிம் பிட் அழகியாக இருந்த இவரை பார்த்த பலர் இவர்... ஷெரினா என அதிர்ச்சி கேள்விகளை எழுப்பிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் உடல் ஏடையை குறைத்து மீண்டும் அழகு சிலையாக மாறியுள்ளார்.

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? நடிகர் சாய் தீனா கூறிய பரபரப்பு விளக்கம்.!

அழுத்தமான கதைக்கும் கதாபாத்திரத்திக்கும் காத்திருக்கும் இவர், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடையில், அழகு பொங்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய குழந்தை பருவ புகைப்படங்கள் சிலவற்றை ஷெரின் தற்போது வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. 

ஒரே நாளில் பிறந்த அப்பா - அம்மாவுக்கு மிக பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!

Latest Videos

click me!