ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த, பபுகைப்படத்தை வெளியிட்ட போது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் இதே போன்று புகைப்படத்தை ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Aishwarya Rai
ஒரு தரப்பினர், ஐஸ்வர்யா ராய் தன மகள் மீது உள்ள அலாதியான பாசத்தின் காரணமாகவே... மகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார்... இதில் என்ன தவறு இருக்கிறது என அவருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
மகள் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி, ஐஸ் கொடுத்த ஒற்றை முத்தத்தின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பல்வேறு விவாதங்களுக்கும் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.