இதன் மூலம், ஒரு கன்னடத் திரைப்படம் ஒரே வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் கனகவதி ரோலில் நடித்த ருக்மிணி வசந்த், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். நாயகியாகவும், வில்லத்தனமான ரோலிலும் அவரது நடிப்பு அபாரம். 'சப்த சாகரதாச்சே எல்லோ' பாகம் 1 மற்றும் 2 மூலம் அறிமுகமான ருக்மிணி வசந்த், தற்போது தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாகியுள்ளார்.