Anna Serial: அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியின் குழந்தைக்கு சூடாமணி என பெயர் வைத்து தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, குழந்தையை தொட்டிலில் போட்டு, எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதன் பிறகு அடுத்ததாக தல தீபாவளி வருவதால் ரத்னா - அறிவழகன் மற்றும் வீரா - சிவபாலன் ஆகிய இருவர் இந்த ஆண்டு தல தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.
24
பணம் வேண்டாம் என மறுக்கும் ஷண்முகம்:
அடுத்ததாக முத்துப்பாண்டி தல தீபாவளி கொண்டாடுவதற்காக ஷண்முகத்திடம் பணத்தை கொடுக்க, அதை சண்முகம் வேண்டாம் என்று மறுக்கிறான். முத்துப்பாண்டி இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லிக் கொடுக்க மீண்டும் மறுக்க, பரணி அதை வாங்கிக்கொண்டு முத்துப்பாண்டியை அனுப்புகிறாள்.
34
சிவபாலனை திட்டும் வீரா:
அதன் பிறகு சண்முகத்தை வெளியே அழைத்துச் செல்கிறாள் பரணி. மறுபக்கம் வீரா ஸ்டேஷனில் இருக்க அங்கு வந்த சிவபாலன் டீ குடித்துக் கொண்டிருக்க இதை பார்த்த வீரா அவனிடம் சண்டை போடுகிறாள். அங்கு வந்த சௌந்தரபாண்டி உனக்கு இங்க என்னடா வேலை? என்று சிவபாலனை கிட்ட கேட்க... அதற்க்கு வீரா இவனுக்கு சூடு சொரணை இல்லை என்று கோபப்பட்டு பிரச்சனை பண்ணுகிறாள்.
44
அடுத்து நடக்க போவது என்ன?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.