ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம்.! நயன்தாரா, சமந்தாவையே பின்னுக்கு தள்ளிய தமன்னா!

Published : Jan 07, 2026, 01:32 PM IST

நடிகை தமன்னா, கோவாவில் நடந்த 6 நிமிட நடனத்திற்காக சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இந்த சம்பளம், நயன்தாரா மற்றும் சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. 

PREV
15
வியப்பில் ஆழ்த்திய தமன்னா.!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் முன்னணி நடிகை சமந்தா ஆகியோரின் சம்பளம் தான் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். ஒரு படத்திற்கு இத்தனை கோடி என இவர்கள் வாங்கும் சம்பளத்தை விட, தற்போது நடிகை தமன்னா ஒரே ஒரு நடன நிகழ்ச்சிக்காக வாங்கியுள்ள சம்பளம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

25
கோவாவை அதிரவைத்த 6 நிமிடங்கள்.!

சமீபத்தில் கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள பிரபல கிளப்பில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்து கொண்டார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில், தனது ஹிட் பாடல்களுக்கு தமன்னா நடனமாடினார். வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நடனத்திற்காக, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் சுமார் 6 கோடி ரூபாய் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மேடையில் அவர் ஆடிய ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் சம்பளம் பெற்றுள்ளார்.

35
நயன்தாரா, சமந்தாவை முந்திய தமன்னா?.!

பொதுவாக நயன்தாரா அல்லது சமந்தா போன்ற நடிகைகள் ஒரு முழு படத்தில் நடிப்பதற்குத்தான் பல கோடிகளைச் சம்பளமாகப் பெறுகிறார்கள். ஆனால், தமன்னா வெறும் 6 நிமிட பெர்பார்மன்ஸிற்காக இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றுள்ளது, சம்பளப் பட்டியலில் அவரை முதலிடத்திற்கு நகர்த்தியுள்ளது. 20 ஆண்டுகால சினிமா பயணத்தில், இன்றும் குறையாத அதே இளமையுடனும் துடிப்புடனும் தமன்னா இருப்பதுதான் இவ்வளவு பெரிய மார்க்கெட்டுக்குக் காரணம்.

45
'காவாலா' கொடுத்த மவுசு.!

'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' ஆகிய பாடல்கள் தமன்னாவை உலக அளவில் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளன. இதனால், பெரிய நிறுவனங்களின் விழாக்கள் மற்றும் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சிகளில் தமன்னாவை ஆட வைக்க பல கோடி ரூபாய் செலவு செய்யத் தொழிலதிபர்கள் தயாராக உள்ளனர்.

55
பிரமிப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்.!

திரைப்படங்களில் நடிப்பதை விட, இது போன்ற நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தமன்னாவுக்கு அதிக வருமானத்தை அள்ளித் தருகிறது. எது எப்படியோ, மில்கி பியூட்டி தமன்னாவின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories