கப்சிப்னு இருக்கும் சூர்யாவின் ‘கருப்பு’ படம் எப்போ ரிலீஸ்? லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Jan 07, 2026, 01:07 PM IST

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, சுவாசிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
Karuppu Movie Release Date

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கருப்பு’. தற்போது கோலிவுட் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க மாஸ் அம்சங்கள் கொண்ட கமர்ஷியல் என்டர்டெய்னராக ‘கருப்பு’ தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டதாக வர்த்தக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ‘கருப்பு’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

24
கருப்பு படம் எப்போ ரிலீஸ்

அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கருப்பு படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளிவருவதாக இருந்தது. அதன்பின்னர் அப்படத்தின் ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அப்படியே ஆஃப் ஆகின. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் லேட்டஸ்ட் ரிலீஸ் அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதத்தில் ‘கருப்பு’ திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

34
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கருப்பு

இந்தப் படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா கிருஷ்ணன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இருவரும் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ‘கருப்பு’ படத்தில் ரசிகர்களுக்கு காட்சியளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சமீப கால ஹிட் பாடல்களால் கவனம் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

44
கருப்பு படக்குழு

பிரம்மாண்ட படங்களின் அனுபவம் கொண்ட ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் கையாள, ஆக்‌ஷன் காட்சிகளை சர்வதேச தரத்தில் வடிவமைக்கும் அன்பறிவ் மற்றும் விக்ரம் மோர் இணைந்து சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர். மேலும், விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான செட்களை உருவாக்கியுள்ளார். தற்போது ‘கருப்பு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் ரிலீஸ் தேதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories