பான் இந்தியா படங்களுக்கு மவுசு
பாகுபலி படத்துக்கு பின்னர் பான் இந்தியா படங்களுக்கு பிற மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தெலுங்கில் தயாராகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படங்களாகவே வெளியிடப்படுகின்றன. அண்மையில் கூட அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பார்த்தது.
பிரபாஸின் ராதே ஷ்யாம்
இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த வாரம் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியானது. பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
பெரும் நஷ்டம்
புஷ்பாவைப் போல் ராதே ஷ்யாமும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்துக்கு தெலுங்கைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.