ரஜினி படத்தின் மொத்த சாதனையை 10 நாட்களில் முறியடித்த RRR...எத்தனை கோடி தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Apr 04, 2022, 07:33 PM IST

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0வின் வாழ்நாள் வசூலை ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் 10 நாட்களில் முறியடித்துள்ளது.  

PREV
19
ரஜினி படத்தின் மொத்த சாதனையை 10 நாட்களில் முறியடித்த RRR...எத்தனை கோடி தெரியுமா?
RRR MOVIE

பிரமாண்ட இயக்குனர்ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில்சூப்பர் ஸ்டார்ஸான  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர் . 

29
RRR MOVIE

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என   நட்சத்திர பட்டாளமே  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

39
RRR MOVIE

கீரவாணியின் தெறிக்கவிடும் பிஜிஎம்,  அனிமேஷன் என பிரம்மாண்டத்திற்கே பிரமாண்டம்  படமாக வெளியான இந்த படம் ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருவதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அடக்கி விடுகிறது.
 
மேலும் செய்திகளுக்கு...Rajamouli Latest: அடர்ந்த காட்டு பகுதியில் ஷூட்டிங் பணியை துவங்கிய ராஜமவுலி...அடுத்த படம் யாருடன் தெரியுமா..?

49
RRR Movie

 சுதந்திர போராட்ட வீரர்களான வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ள இந்த படம் ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது.

59
RRR movie

 படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அடுத்தடுத்து  ரூ.340 கோடிரூ. 500 கோடி என மாஸ் காட்டியது.

69
RRR Movie

இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும்  ஆர் ஆர் ஆர் வசூல் சாதனை செய்தது.  உலக அளவில் 21 பிரதேசங்களில் வெளியான 'இந்த திரைப்படம் 6.32 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து, ஒரு வார இறுதியில் அதிகம் வசூல் ஈட்டிய படமானது.

79
RRR Movie

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரையரங்குகளில் 10 நாட்களை கடந்து ரசிகர்களின் ஆதரவோடு பட்டையை கிளப்பி வருகிறது.

89
RRR vs 2.0

அதோடு 10 நாட்களில் ஆர் ஆர் ஆர் வசூல் மூலம் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் ரூ.800 கோடியை குவித்து சாதனை படைத்திருந்தது. 

99
RRR vs 2.0

இது குறித்து வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் "#RRR ரூ. 819.06 கோடியுடன் #2Point0 இன் வாழ்நாள் மொத்த வசூல் 800 கோடி சாதனையை முறியடித்துள்ளதாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories