ரோஜா சீரியலில் ஷாமிலிக்கு பதில் இவர் தான் வில்லி... வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

First Published | Jun 8, 2021, 2:41 PM IST

ரோஜா சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ஷாமிலி விலகிய நிலையில்... அவருக்கு பதில் இந்த தொடரில் நடிக்க உள்ளவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியல் பல்வேறு திருப்பு முனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
அழகிய குடும்பத்தையும், விபத்தில் பிரிந்த தாய் , தந்தை, மகள் எப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
Tap to resize

யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகள் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் நடைபெறுவதால், டி.ஆர்.பியிலும் கெத்து காட்டி வருகிறது.
இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில், பிரியங்கா நல்கரி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் பிரதாப் என்கிற கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பலர் காயத்திரி, ராஜேஷ், வடிவுக்கரசி உள்ள பலர் நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த சீரியலில் அதிரடி வில்லையாக ஷாமிலி நடித்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே இவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளனர் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சீரியல் குழுவினரே இது குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

Latest Videos

click me!