பிக்பாஸ் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்..!

First Published Jun 8, 2021, 11:38 AM IST

பிக்பாஸ் பிரபலமான  மஹத் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது மஹத் குழந்தை புகைப்படத்துடன் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத்.
undefined
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
undefined
இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
undefined
இதைத்தொடர்ந்து தற்போது பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பும் நடந்து முடிந்தது.
undefined
இந்நிலையில் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு நேற்று காலை அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
undefined
இதனை மஹத் மனைவி மற்றும் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
undefined
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!