தொடர்ந்து சத்யன் பல்வேறு பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில், ஊடகங்கள் தான் சொல்லாத செய்தியை சொன்னதாக போடுவதாக சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று வீடியோ வெளியிட்ட சத்யன், ''எனக்கு பேரன்பு கொடுத்த உலக மக்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
குழிதோண்டி புதைக்காதீர்கள்
நான் பேசுவது நிறைய நல்ல விஷயங்களை உள்ளதை உள்ளபடி சொல்லும் அந்த ஊடகங்களுக்கு கிடையாது. சிலர் தன்னுடைய சுயநலத்துக்காக நாம் சொல்லாத விஷயங்களையும், நாம் பகிராத விஷயங்களையும், பகிர்ந்த விஷய்ங்களை வேறு மாதிரி ஒரு டைட்டிலாகவும், ஸ்கீரின் ஷாட் மாதிரியும் போடுகின்றனர். இது இத்தனை வருஷம் உழைப்பினால் முன்னேறிய ஒருவரை குழிதோண்டி புதைக்கிற மாதிரியானது.