எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் செம விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பார்கவி மற்றும் ஜீவானந்தத்தை மீட்க செல்லும் ஜனனி, போகும் வழியில் தன்னுடைய செல்போனை மிஸ் பண்ணிவிடுகிறார். இதையடுத்து, கடை ஒன்றிற்கு அவர் சென்றபோது அங்கி டிவியில், ஜீவானந்தம் மற்றும் பார்கவியை எண்டவுண்டர் செய்துவிட்டதாக புலிகேசி கூறுவதை பார்க்கிறார். இதையடுத்து பதறிப்போய் நந்தினி மற்றும் சக்திக்கு போன் போடும் ஜனனி, அவர்கள் நம்மை திசை திருப்புவதற்காக இதுபோன்ற வேலைகளை செய்திருக்க கூடும். என்னுடைய மனதில் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்காது என தோன்றுவதாக கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனுக்கு வரும் சந்தேகம்
ஜீவானந்தம், பார்கவியை புலிகேசி சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறியதைக் கேட்டு அறிவுக்கரசி கும்மாளம் போட்டுக் கொண்டிருக்க, அதை முழுமையாக ஏற்க முடியாத ஆதி குணசேகரன், தன்னுடைய ஆட்களிடம் சொல்லி அதை கண்டுபிடிக்க சொல்கிறார். அதுமட்டுமின்றி ஜனனியின் போட்டோவையும் ரெளடிகளுக்கு அனுப்பிவிட்டு, அவரையும் தீர்த்துக் கட்டுமாறு கூறுகிறார். இதனால் செல்லும் வழியில் ஜனனி இளநீர் குடித்த கடையில் சென்று, அவரைப்பற்றி ரெளடிகள் கேட்கிறார்கள். அந்த இளநீர் கடைக்காரரும் இந்தப் பெண் இப்போ தான் இங்கு வந்து சென்றதாக கூறுகிறார். பின்னர் அவர்கள் ஜனனியை துரத்தி செல்கிறார்கள்.
34
எஸ்கேப் ஆகும் ஜனனி
குணசேகரனின் ஆட்கள் தன்னை துரத்தி வருவதை அறிந்த ஜனனி, அவர்களிடம் இருந்து தப்பித்துவிடுகிறார். மறுபுறம் மண்டபத்தில் அன்புக்கரசி தனக்கு கல்யாணத்திற்கு மேக் அப் போட நல்ல பியூட்டீசியன் வேண்டும் என கூறியிருந்த நிலையில், புர்கா அணிந்தபடி ஒரு பெண் அன்புக்கரசிக்கு மேக் அப் போட வருகிறார். இது யாராக இருக்கும் என்கிற சந்தேகம் அங்கு உள்ள கதிர், கரிகாலன், அறிவுக்கரசி ஆகியோருக்கு இருக்கிறது. அந்த பெண்ணும் தனது முகத்தை காட்ட மறுக்கிறார். இதனால் அந்த புர்கா அணிந்த பெண் யாராக இருக்கும் என்று தெரியாமல் அனைவரும் குழம்பிப் போகிறார்கள்.
அநேகமாக அந்த புர்கா அணிந்த பெண் நந்தினியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாசலிலேயே மேக்கப் போட வந்த பெண்ணை மடக்கி அவருக்கு பதிலாக நந்தினி புர்கா அணிந்து வந்திருக்கலாம். அது இல்லையெனில் புர்கா அணிந்து பார்கவியே மண்டபத்துக்குள் வந்திருக்கலாம். அதுமட்டும் நடந்தால் கல்யாணத்தில் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஜனனி ஜீவானந்தத்தை மீட்டாரா? ரத்த காயங்களுடன் கிடந்த ஜீவானந்தம் என்ன ஆனார்? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடந்தது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.