Siragadikka Aasai Serial Today 798th Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை ஆறு ஆண்டுகளுக்கு பின் வீட்டிற்கு அழைத்து வரும் விஜயா, அவனை அடித்து டார்ச்சர் செய்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன்னுடன் இருந்தால் உயிருக்கே ஆபத்து என ஜோசியர் சொன்னதை கேட்டு, அவனை பாட்டி வீட்டில் விட்டுவிட்டார் விஜயா. ஆரம்பத்தில் மகன் மீது பாசமாக இருக்கும் விஜயாவுக்கு போகப் போக பாசம் குறைந்துவிடுகிறது. இடையே அவனை பார்க்க செல்கிறார் விஜயா, அப்போது ஊரில் உள்ள பசங்களுடன் விளையாடி வரும் முத்து, அங்கு ஒருவனை அடித்து அடாவடி செய்வதை பார்த்து ஷாக் ஆகிறார். நேரில் சென்று அவனை தட்டிக் கேட்கக்கூடாது என்பதால் போன் போட்டு தான் பார்த்த விஷயத்தை முத்துவின் பாட்டியிடம் கூறுகிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
முத்துவை தரதரவென இழுத்து செல்லும் விஜயா
ஆறு ஆண்டுகள் கழித்து முத்துவை அழைத்து செல்ல வருகிறார் விஜயா. அப்போது அப்பா மீது பாசத்தை பொழியும் முத்து, அம்மாவிடம் செல்ல மறுக்கிறான். இத்தனை ஆண்டுகள் பார்க்காததால், நீங்க தான் என் அம்மா என்பதே தனக்கு மறந்துவிட்டதாக கூறுகிறான். பின்னர் அவனை வீட்டுக்கு அழைத்து செல்ல விஜயா அழைக்கும் போது, தான் பாட்டி வீட்டில் தான் இருப்பேன் என முரண்டுபிடிக்கிறான் முத்து. பொறுத்து பொறுத்து பார்த்த விஜயா, அவன் சொல்பேச்சு கேட்காததால், அவனை தரதரவென இழுத்துச் சென்றுவிடுகிறார். அம்மா வீட்டுக்கு வந்தாலும் முத்துவுக்கு பாட்டி வீட்டுக்கு செல்லவே ஆசைப்படுகிறார்.
34
முத்துவை டார்ச்சர் பண்ணும் விஜயா
விஜயா வீட்டில் முத்துவுக்கு சாப்பாடு கொடுக்க, அதை கோபத்தில் கொட்டிவிடுகிறான் முத்து. பின்னர் மனோஜின் சாப்பாடையும் கீழே போடுகிறான். இதனால் கோபமடையும் விஜயா, உடனே அடுப்பில் கரண்டியை நன்கு சுட வைத்து, முத்துவின் காலில் சூடு வைக்கிறார். இதனால் வலியில் கதறும் முத்து, தன்னுடைய பாட்டிக்கு போன் போட்டு அழுகிறான். தன்னை வந்து அழைத்து சென்றுவிடுமாறு கதறுகிறான். பின்னர் பாட்டி அவனை வந்து பார்ப்பதாக கூறி சமாதானப்படுத்துகிறார். விஜயாவும் மனோஜிடம் காட்டும் பாசத்தை துளிகூட முத்து மீது காட்டாமல் இருக்கிறார். இதனால் வீட்டில் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.
அம்மாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் கஷ்டப்படும் முத்து எதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார். அவரை போலீஸ் அழைத்து செல்லும் போது விஜயா தடுக்காதது ஏன்? முத்துவின் இந்த நிலைமைக்கு விஜயாவும் மனோஜும் தான் காரணம் என அண்ணாமலை அடிக்கடி சொல்லுவார். அப்படி பார்த்தால் அவர்கள் இருவரால் தான் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும். அதுபற்றிய அனல்பறக்கும் எபிசோடுகள் இனி வர உள்ளன. இதனால் இந்த வாரம் முத்துவின் பிளாஷ்பேக்கில் நடந்த கசப்பான சம்பவங்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.