பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் அரசிக்கு மீண்டும் சதீஷ் உடன் திருமணம் பேசி முடிக்க பாண்டியனின் அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். இதில் அரசியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி மற்றும் குமரவேல் காதல் விவகாரம் தெரிந்து பாண்டியன் தனது மகளுக்கு அவசர அவசரமாக அக்காவின் மகனான சதீஷ் உடன் திருமணம் பேசி முடிந்தார். மேலும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதற்கிடையில் குமரவேல் உடன் வெளியில் சுற்றி திரிந்த அரசி அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு பின்னர் அவருடன் பேசுவதை புறக்கணித்த நிலையில் சதீஷை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தான் குமரவேலுவை காதலித்ததை சதீஷிடமும் சொல்லிவிட்டார். அப்போதும் கூட சதீஷிற்கு அரசியை பிடித்திருந்தது. இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணம் நடப்பதற்கு முந்தைய நாள் குமரவேல் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறி சுகன்யா அவரை அனுப்பி வைத்தார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவர் அரசியை கடத்தி சென்றுவிட்டார். ஒரு நாள் இரவு முழுவதும் அவரை கட்டி போட்டு அடைத்து வைத்திருந்து மறுநாள் காலையில் தான் அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். இது அவரது குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவரே கூறியிருந்தார்.
34
தனக்கு தானே தாலி கட்டிக் கொண்ட அரசி
இதைத் தொடர்ந்து அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டிற்கு சென்றார். இது அரசியின் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்ல வந்த போது இந்த விவகாரம் தெரிய வர பாண்டியனின் அக்கா பாண்டியனின் குடும்பத்திற்கு சாபம் விட்டுச் சென்றார். அதோடு, நிச்சயத்திற்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது. அதனை திருப்பி தர வேண்டும் என்று கூறி அதனையும் திருப்பி பெற்றுக் கொண்டு இனிமேல் உங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் தான் இப்போது அரசியின் கோர்ட் கேஸ் வழக்கு முடிந்த நிலையில் மீண்டும் பாண்டியனின் வீட்டிற்கு வந்த அவரது அக்கா அரசிக்கும், சதீஷிற்கும் திருமணம் நடத்தி வைக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்துள்ளார். இதைக் கேட்டு அரசி அதிர்ச்சி அடைந்த நிலையில் பாண்டியன் எதுவாக இருந்தாலும் தனது மகள் அரசியை கேட்டு தான் எந்த முடிவையும் எடுப்பேன் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அரசியிடம் சென்று இதைப் பற்றி பாண்டியன் கேட்கிறார். இதற்கு அரசி என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது தவறை உணர்ந்த குமரவேலுவையே மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா அல்லது சதீஷை திருமணம் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதற்கான பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.