Cannes 2022 : கேன்ஸ் விழாவில் மாஸ் காட்டிய மாதவன்...பாராட்டை குவித்த 'ராக்கெட்ரி'!

Kanmani P   | Asianet News
Published : May 20, 2022, 01:17 PM IST

Cannes 2022 : மாதவனின் 'ராக்கெட்ரி' திரைப்படம் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அந்த படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

PREV
18
Cannes 2022 : கேன்ஸ் விழாவில் மாஸ் காட்டிய மாதவன்...பாராட்டை குவித்த 'ராக்கெட்ரி'!
rocketry the nambi effect

தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகனாக இருந்து வரும் மாதவன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி.. இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியதாகும்.  நம்பி நாராயணனாக மாதவன் (Madhavan) நடித்திருப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

28
Rocketry The Nambi Effect

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் (Nambi Narayanan) ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் . பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.  நம்பி நாராயணன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மாதவன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்..

38
Rocketry The Nambi Effect

ஏற்கனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த சிம்ரன் இந்த படம் மூலம் 3வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களுடன் ஜெகன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும்  சூர்யா (suriya), ஷாருக்கான் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். 

48
Rocketry: The Nambi EffectRocketry

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள ராக்கெட்ரி (Rocketry) படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு பின்னர் ஜூலை மாதம் 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

58
Rocketry The Nambi Effect

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வரும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச திரைப் பிரபலங்கள் முன்னிலையில் நேற்று ராக்கெட்ரி திரையிடப்பட்டது. இதையொட்டி நடிகர் மாதவன் இந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு மிகுந்த பாராட்டு கிடைத்துள்ளது.
 

68
Rocketry The Nambi Effect

மாதவன் குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், கேன்ஸ் விழாவில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' படத்தினை இப்போதுதான் பார்த்தேன். இந்திய சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ள மாதவனுக்கு தலைவணங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் 'லி மஸ்க்' என்ற குறும்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்படுவதையொட்டி அங்கு சென்றுள்ளார்.

78
Rocketry The Nambi Effect

அதேபோல பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம் எவ்வளவு அழகாக இருக்கிறது. கேன்ஸ் விழாவில் நேற்றிரவு திரையிடப்பட்ட இந்தப் படத்தை, ஆர் மாதவன் எவ்வளவு அழகாக இயக்கி, நடித்துள்ளார். மேலும் பார்வையாளர்களில் ஒருவராக நம்பி நாரயணனே இருந்தது இதயத்தை உலுக்கியது' என்று தெரிவித்துள்ளார்.

88
Rocketry The Nambi Effect

மேலும் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ள விளையாட்டு, இளைஞர்நலன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ' 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' படம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்யும். நிச்சயம் உலகம் பார்க்கவேண்டிய கதை. கதையின் ஆன்மாவைப் படம்பிடித்து, அதை உலகத்துடன் பகிர்ந்து கொண்டதற்கு நடிகர் மாதவனுக்கு பாராட்டுக்கள்' என்று கூறியுள்ளார்.

click me!

Recommended Stories