தனுஷ் உடனான பெட்ரூம் சீன் எத்தனை டேக் போச்சு?... வில்லங்கமான கேள்வி கேட்ட நெட்டிசனை விளாசிய மாளவிகா மோகனன்

Published : May 20, 2022, 10:10 AM ISTUpdated : May 20, 2022, 10:29 AM IST

Malavika mohanan : டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா மோகனன், ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

PREV
14
தனுஷ் உடனான பெட்ரூம் சீன் எத்தனை டேக் போச்சு?... வில்லங்கமான கேள்வி கேட்ட நெட்டிசனை விளாசிய மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் இளசுகள் மத்தியில் டிரெண்டான மாளவிகாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர் திரைப்படம்.

24

அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் மாளவிகாவின் மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது. இதைவைத்து பாலிவுட் பட வாய்ப்பையும் கைப்பற்றினார் மாளவிகா. இதுதவிர கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா.

34

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. இதன்பின் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத போதும் இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

44

அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் நெட்டிசன் ஒருவர், மாறன் படத்தில் தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை படமாக்கியபோது எத்தனை டேக் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு, உங்கள் மண்டைக்கும் மோசமான எண்ணம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

click me!

Recommended Stories