சீரியல் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வியின், வளைகாப்பு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இது குறித்த சில புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால்... திறமை உள்ளவர்களை விஜய் டிவியே அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்பதே உண்மை. இதற்க்கு உதாரணம் பலர் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில் அறிமுகமாகி, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.
27
Rithika Tamilselvi with Cute Brother
மிகவும் சைலன்டான ரோலில் நடித்த இவருக்கு, அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதன்படி விஜய் டிவியில் டாப் 10 TRP-யில் இடம்பிடித்து, நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில், விஜே விஷால் ஜோடியாக அம்ரிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். "ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் அம்ரிதா எப்படி எழில் வாழ்க்கைக்குள் வருகிறார். எழிலுக்கும் அம்ரிதாவுக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவர்களை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்கிற எதிர்பாராத திருப்பு முனையுடன் இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் இடம் பெற்றது.
47
Rithika Tamilselvi participate Cook With Comali
'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாலாவுடன் செம்ம சேட்டை செய்தார். ஒரு சில வாரங்கள் மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரித்திகா கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினாலும், இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
இந்நிலையில் ரித்திகா கடந்தாண்டு தன்னுடைய காதலர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு சீரியலில் இருந்து விலகிய ரித்திகா, சமூக வலைதளத்தில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
67
Rithika Baby shower Photos
சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை ரித்திகா அறிவித்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு குடும்பத்தினர் விமர்சியாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்களை ஏற்கனவே சமூக வலைதளத்தில் ரித்திகா வெளியிட்ட நிலையில், தற்போது தன்னுடைய குட்டி தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மற்ற சில புகைப்படங்களையும் ரித்திகா வெளியிட்டு உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் வழக்கம்போல் தங்களுடைய அன்பை பொழிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.