Published : Aug 21, 2024, 12:56 PM ISTUpdated : Aug 21, 2024, 01:04 PM IST
நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நிறுத்தப்பட்டதன் காரணம் குறித்தும், அவரின் திருமணம் எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்த தகவலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80-பது மற்றும் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கமலஹாசன், ரஜினிகாந்த், போன்ற நடிகர்களின் படங்களுக்கு நிகரான வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த், ரஜினிகாந்தை விட அதிகம் சம்பளம் பெறும் நடிகராகவும் இருந்தார்.
27
Captain Vijayakanth DMDK Party
முன்னணி நடிகராக இருக்கும் போதே... தேமுதிக என்கிற கட்சியை துவங்கி, அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்தார். விஜயகாந்தின் அரசியல் உத்வேகமும், அவரின் எழுச்சியும் மக்களை மிக விரைவில் சென்றடைந்த நிலையில், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியாக மாறினார். தமிழகத்தை ஆளும் முதல்வராக விஜயகாந்த் வருவார் என மக்கள் நினைத்த நிலையில், இவர் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனை விஜயகாந்தை எழுந்து நிற்க முடியாமல் வீல் சேரிலேயே சுழட்டி போட்டது.
அரசியலுக்கு வந்த உடனேயே,தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துக் கொண்ட விஜயகாந்த், முழுமையாக அரசியலில் ஆர்வம் காட்டினார். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்னர், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சியை ஒரு தூண் போல் நின்று காப்பாற்றி வருகிறார்.
47
Vijayakanth Death
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உள்ள ,மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இழப்பு, தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும்... மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது. விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள், உரிய அரசு மரியாதை உடன் நடந்த நிலையில்... விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள அவருடைய அலுவலகத்திலேயே, சந்தன பேழைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது இடத்தில் அவருக்கு நினைவிடத்தையும் கட்டி குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழக மக்களும் வழிபட்டு வருகின்றனர்.
மக்கள் பலர் விஜயகாந்தை மனதில் நினைத்து, அவருடைய நினைவிடத்தில் தங்களின் கஷ்டங்களை கூறி வேண்டிக் கொண்டால் தங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி கிடைப்பதாகவும், உயிரோடு இருக்கும்போது பலருக்கு பசியாற்றிய விஜயகாந்தின் புண்ணிய ஆன்மா, அவரின் நினைவிடத்தில் கடவுளாக இருந்து அருள் புரிவதாக கூறி வருகின்றனர்.
67
vijayakanth son betrothal
விஜயகாந்தை தொடர்ந்து அவருடைய மகன் விஜய பிரபாகரனும், அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மீண்டும் இவரின் திருமண விவகாரம் பேசு பொருளாகி மாறியுள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது. திருமணம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 5 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
விஜயகாந்தின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வந்ததால், திருமணத்தை அவருடைய குடும்பத்தினர் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், விஜயகாந்த் இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில்... ஒரு வருடம் ஆன பின்னரே விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் செய்த அதே பெண்ணை தான் விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்வாரா? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.