பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி நெட்பிளிக்ஸில் மகாராஜா படைத்த மாஸ் சாதனை!

First Published | Aug 21, 2024, 12:46 PM IST

நெட்பிளிக்ஸில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் முதலிடம் பிடித்துள்ளது.

Maharaja is the Most Viewed Indian Films on Netflix 2024

கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் அதீத வளர்ச்சியை கண்டன. புதுப்படங்களே அதில் வெளியிடும் அளவுக்கு பேமஸ் ஆனதோடு மட்டுமின்றி, தியேட்டரில் ரிலீசாகும் படங்களின் டிஜிட்டல் உரிமையும் அதிக விலைக்கு விற்பனையானது. இதன்காரணமாக எந்த ஒரு புதுப்படமானாலும் ஒரு மாதத்திலேயே ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதனால் தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்கின்றனர்.

Maharaja Movie

அந்த வகையில் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு இதுவரை தங்கள் ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பார்வைகளை பெற்ற படம் எது என்கிற விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த பட்டியலில் டாப் 10 இடத்தில் 9 இடங்களை இந்தி படங்கள் ஆக்கிரமித்து இருந்தாலும், கெத்தாக முதலிடத்தை தமிழ் படமான மகாராஜா தட்டி தூக்கி இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒரே ஒரு தென்னிந்திய மொழி படமும் அதுதான்.

இதையும் படியுங்கள்... பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்காங்களே? இவங்க தான் லோகேஷ் கனகராஜின் சகோதரியா?

Tap to resize

Maharaja Movie Stills

மகாராஜா திரைப்படத்தை 18.6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் க்ரூ என்கிற இந்தி படம் உள்ளது. அப்படம் 17.9 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. லாபட்டா லேடீஸ், ஜோதிகா நடித்த ஷைத்தான், ஹிருத்திக் ரோஷனின் பைட்டர் ஆகிய திரைப்படங்கள் முறையே 3, 4 மற்றும் 5வது இடத்தை பிடித்திருக்கின்றன. ஆறாவது இடத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் படம் உள்ளது. ஷாருக்கானின் டுங்கி படத்துக்கு இந்த லிஸ்ட்டில் 8ம் இடம் கிடைத்துள்ளது.

Maharaja Movie Vijay Sethupathi

மகாராஜா திரைப்படத்தை நிதிலன் இயக்கி இருந்தார். இப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் கடந்த ஜூன் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராஜ் கஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தியேட்டரில் சக்கைப்போடு போட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது ஓடிடியில் சாதனை படைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 'மகாராஜா' படத்திற்காக அரும்பாடுபட்டும்... மிஸ் செய்த இளம் நடிகர்! நித்திலன் பகிர்ந்த தகவல்!

Latest Videos

click me!