கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு பின்னர், அப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு காந்தாரா. வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தான் தற்போது இந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி கன்னடத்தில் மட்டும் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தை வியந்து பாராட்டினர். அதேபோல் தமிழில் நடிகர் கார்த்தி, தனுஷ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். குறிப்பாக ரஜினி இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் என புகழ்ந்தார்.
இப்படி இந்திய சினிமாவே கொண்டாடி வரும் காந்தாரா திரைப்படம் இந்தியில் மட்டும் ரிலீசான 12 நாட்களில் ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் இந்தி பெல்டில் பொன்னியின் செல்வன் படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை காந்தாரா பன்னிரண்டே நாட்களில் முறியடித்துள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற பெரிய பட்ஜெட் படத்தின் வசூலை சிறு பட்ஜெட் படமான காந்தாரா முறியடித்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காந்தாரா படம் உலகளவில் மொத்தமாக ரூ.200 கோடி வசூலையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குடி... கும்மாளம்... என நடிகர் - நடிகைகளுடன் நடந்த நடிகை சங்கீதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரல் போட்டோஸ்!