ரன்பீர் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தான் பிரம்மாஸ்திரா. இந்தப் படத்தில் அவரது மனைவி ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க படத்திற்கான குரலை அமிதாப்பச்சன் கொடுத்திருந்தார். அயன் முகர்ஜி இயக்கிய இந்த படத்தை கரன் ஜோஹர் உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர்.
24
பேண்டஸி அதிரடி நாடகமாக வெளியாகி இருந்த இந்த படம் முன்னதாக இதன் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் மூலம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் இந்த ஆண்டுதான் நிறைவுற்றது. இயக்குனரின் சிறுவயது அனுபவத்தை வைத்து இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.
முதலில் படத்திற்கு டிராகன் என்று தான் பெயரிடப்பட்டதாம் இதன் பிறகு பிறகுதான் இதற்கு பிரம்மாஸ்திரா என பெயரிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் கையில் இருக்கும் ஆயுதத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தளத்தில் தான் ரன்பீர் கபூர் - ஆலியா பட் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ப்ரோமோஷன் விழாக்களில் இந்த தம்பதிகள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
44
வயிற்றில் குழந்தையுடன் ஆலியா கொடுத்திருந்த போஸ்களும் ட்ரெண்டாக்கின. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 430 ஒரு கோடியை நுழைவுச்சீட்டு வாயிலாக பெற்றதாக கூறப்படுகிறது. இருந்தும் விமர்சன ரீதியில் படம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பிரம்மாஸ்திரா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வரும் நவம்பர் 4-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.