யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக சென்ற இவர், அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிற முக்கிய காரணமாக இருந்தார். ஒரே வாரத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே, தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார். அவரை எப்படியாவது சமாதானப்படுத்தும் முனைப்பில் இருந்தார் பிக்பாஸ். ஆனால் அதையெல்லாம் கேட்காத ஜிபி முத்து, தான் வீட்டுக்கு செல்வதில் உறுதியாக இருந்ததால் கடந்த வாரம் இறுதியில் அவர் வெளியேற அனுமதித்தார் கமல்.
இதையும் படியுங்கள்.. ‘பார்ட் 2’ ஹீரோவாக மாறிய கார்த்தி... கைதி 2 முதல் சர்தார் 2 வரை கைவசம் இத்தனை படங்களா..!
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் தனது ஊருக்கு சென்ற ஜிபி முத்து, தனது பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், தேசிய விருது வென்ற இயக்குனரான சீனு இராமசாமி, ஜிபி முத்துவை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.