வெளியில் இருக்கும் போது இதுகுறித்து எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த ரச்சிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் தான் தனது கணவர் தினேஷை பிரிந்ததற்கான காரணம் குறித்து உருக்கமாக பேசினார். தனது பெற்றோருக்கு தான் பண உதவி எதுவும் செய்யக்கூடாது என தினேஷும், அவரது குடும்பத்தினரும் தடுத்ததாகவும், அதனால் அவரை பிரிந்ததாகவும் கூறி இருந்தார்.