சினிமா நட்சத்திரங்களின் சம்பளம் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு கோடி, இரண்டு கோடி என சம்பளத்தை உயர்த்தி வந்த நடிகர்கள், தற்போது படத்துக்கு படம் 50 கோடி உயர்த்த தொடங்கிவிட்டனர். உதாரணத்திற்கு நடிகர் விஜய் கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அப்படம் ஹிட்டான பின்னர் அவர் தன்னுடைய அடுத்த படமான ஜனநாயகனில் நடிக்க ரூ.275 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அவர் ஒரே படத்தில் 75 கோடி சம்பளத்தை உயர்த்தியதே பெரியளவில் பேசு பொருள் ஆன நிலையில், தற்போது ஒரு நடிகர் ஒரு படம் ஹிட் ஆனதும் தன்னுடைய சம்பளத்தை 98 கோடி உயர்த்தி உள்ளார்.
24
ஒரே படத்தில் 98 கோடி சம்பள உயர்வு
கடந்த 2022-ம் ஆண்டு வரை ஒரு படத்துக்கு 2 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி வந்த நடிகர், பான் இந்தியா அளவில் ஒரு ஹிட் படத்தை கொடுத்ததும் தன்னுடைய சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தி உள்ளார். இது அவர் முந்தைய படத்துக்கு வாங்கிய சம்பளத்தை விட 98 கோடி அதிகமாகும். இப்படி தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் வேறுயாருமில்லை, நடிகர் ரிஷப் ஷெட்டி தான். காந்தாரா என்கிற ஒற்றைப் படம் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்த ரிஷப் ஷெட்டி, தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ந் தேதி தான் திரைக்கு வர உள்ளது.
34
100 கோடி சம்பளம் வாங்கும் ரிஷப் ஷெட்டி
இப்படத்தை இயக்கியுள்ளதும் ரிஷப் ஷெட்டி தான். அவர் காந்தாரா 2 படத்தை இயக்க ரூ.100 கோடி சம்பளம் கேட்டது மட்டுமின்றி லாபத்தில் இருந்து பங்கும் கேட்டிருக்கிறாராம். இதன்மூலம் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் யாஷுக்கு அடுத்தபடியாக ரிஷப் ஷெட்டி உள்ளார். கேஜிஎஃப் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் நடிகர் யாஷ் தன்னுடைய சம்பளத்தை 200 கோடியாக உயர்த்திவிட்டார். அவர் தற்போது இந்தியில் உருவாகும் இராமாயணம் படத்தில் இராவணனாக நடிக்க ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரிஷப் ஷெட்டி உள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 திரைப்படம் ஒரே நேரத்தில் ஏழு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாம். முந்தைய காந்தாரா படத்தைப் போலவே, இப்படத்தையும் பெரிய அளவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கன்னடம், இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. 2022 இல் வெளியான காந்தாரா படத்தின் முன்னுரைதான் இந்த காந்தாரா அத்தியாயம் 1. காந்தாரா திரைப்படம் வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தப் படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.