சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் சிவகார்த்திகேயன். அஜித், விஜய், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இவர் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து நான்கு படங்கள் தயாராகி வருகிறது.
24
சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள்
அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவையும் சிவகார்த்திகேயனின் கைவசம் உள்ளது.
34
சிவகார்த்திகேயன் மகன் குகன் பிறந்தநாள்
சினிமாவில் இவ்வளவு பிசியாக இருந்தபோதிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் தவரவிடுவதில்லை. அந்த வகையில் அவர் தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை பேமிலியோடு கொண்டாடி இருக்கிறார். மகனோடு சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்த்தி சிவகார்த்திகேயன், எங்கள் லிட்டில் ராக்ஸ்டார் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மொத்தம் 3 பிள்ளைகள், அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் தனது மனைவி ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆராதனா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு குகன் தாஸ் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2024-ம் ஆண்டு பவன் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இதில் ஆராதனா சினிமாவில் பாடல்களும் பாடி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் தான் ஆராதனா முதல் பாடலை பாடி இருந்தார். அந்த பாடல் வேறலெவல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.