தமிழ் சினிமாவில் அதிக டிமாண்ட் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இதுவரை இவர் இயக்கிய ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அவர் இயக்கும் 6வது திரைப்படம் கூலி. இப்படத்தின் மூலம் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார் லோகேஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.
24
கூலி பட பாடல் வெளியீடு
அதன்படி கூலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக சிக்கிட்டு என்கிற பாட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இப்பாடலை டி ராஜேந்தர் உடன் இணைந்து அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் பாடி இருந்தனர். இப்பாடல் பெரியளவில் டிரெண்ட் ஆகவில்லை. அதனால் அடுத்த பாடலை வேக வேகமாக ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. அதன்படி அப்படத்தில் இடம்பெறும் மோனிகா என்கிற பாடலை தான் படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. அப்பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தில் ஒரு ஐட்டம் சாங் இடம்பெறுவது இதுவே முதன்முறை ஆகும்.
34
காப்பி சர்ச்சையில் சிக்கிய மோனிகா பாடல்
மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து செளபினும் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தப் பாடல் கேட்ட உடன் பிடிக்கும் வகையில் செம வைப் ஆக உள்ளதால் ரசிகர்கள் மோனிகா பாடலை முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். இந்தப் பாடல் தற்போது யூடியூப் டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் மோனிகா பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அனிருத் தான் ஏற்கனவே இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலின் ட்யூனை தான் மோனிகா பாடலிலும் பயன்படுத்தி இருப்பதாக ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
அந்தப் பாடல் வேறெதுவுமில்லை. விடாமுயற்சி படத்திற்காக அனிருத் இசையமைத்த சாவடீக்கா பாடலின் காப்பி தான் இந்த மோனிகா பாடல் என நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். இரண்டு பாடல்களின் ட்யூனும் ஒரே மாதிரி தான் உள்ளது என்றும் தன் பாடலையே அனிருத் காப்பியடித்து இருப்பதாக கலாய்த்து வருகிறார்கள். ஒரு சிலரோ இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே ஆடிய நடனம் சுறா படத்தில் இடம்பெறும் நான் நடந்தால் அதிரடி பாடல் மற்றும் சிங்கம் 2-வில் இடம்பெற்ற வாலே வாலே பாடல் ஆகியவற்றிற்கு ஒத்துப் போவதாக குறிப்பிட்டு மீம் போட்டு வருகிறார்கள்.