தியேட்டர் ரிலீஸ் படங்கள்
செப்டம்பர் 25 மற்றும் 26ந் தேதி தியேட்டரில் மொத்தம் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன்படி ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவதா நடித்த கயிலன், ஸ்ரீலீலாவின் டப்பிங் படமான கிஸ் மீ இடியட், அருண் பாண்டியன் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட், ரிஷி ரித்விக் நடிப்பில் உருவான குற்றம் தவிர், ஷகீலா, மதுமிதா, மிலா நடிப்பில் தயாராகி இருக்கும் சரீரம், புதுமுகங்கள் நடித்த டோர் நம்பர் 420, ஆதி மற்றும் ஆறுமுகம் இயக்கத்தில் ஹரிஷ் மற்றும் மேக்னா நடித்த பனை, ராஜசோழன் இயக்கியுள்ள ஐஏஎஸ் கண்ணம்மா, ஷான் நிகம் நடிப்பில் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள பல்டி ஆகிய படங்கள் 26ந் தேதி ரிலீஸ் ஆகின்றன.
இதுதவிர எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான குஷி வருகிற செப்டம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடம் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்த ஓஜி திரைப்படமும் செப்டம்பர் 25-ல் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர தமிழில் எம்.சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த 7 நாட்கள் திரைப்படமும் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி திரைகாண உள்ளது.