கூலியால் அடுத்தடுத்து காலியாகும் லோகேஷின் படங்கள்... அடப்பாவமே கைதி 2-வும் டிராப் ஆகிறதா?

Published : Sep 22, 2025, 11:20 AM IST

லோகேஷ் கனகராஜ் கைவசம் இருந்த படங்கள் ஒவ்வொன்றாக கைநழுவி சென்று வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைதி 2 திரைப்படமும் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாம்.

PREV
14
Kaithi 2 Movie Shelved

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனராக வலம் வந்தார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கூலி திரைப்படம் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து விமர்சன ரீதியாக தோல்விப் படமாகவே அமைந்தது. கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் மளமளவென சரிவை சந்தித்து உள்ளது. கூலி படத்தின் ரிசல்ட்டால் அவர் கைவசம் இருந்த படங்கள் ஒவ்வொன்றாக கை நழுவி போகத் தொடங்கி இருக்கின்றன.

24
கைவிடப்படும் லோகேஷ் படங்கள்

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கூலி படத்தின் ரிசல்டால் அவரிடம் இந்த பிரம்மாண்ட படத்தை ஒப்படைக்க ரஜினி தயக்கம் காட்டுவதாகவும், கமல் ரிஸ்க் எடுத்து பார்க்க தயாராக இருந்தும், ரஜினி தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வராததால், தற்போது லோகேஷுக்கு பதில் வேறு இயக்குனர்கள் வசம் அந்த படம் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் சுந்தர் சி ஆகியோரின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.

34
டிராப் ஆன அமீர்கான் படம்

அதேபோல் கூலி படத்தில் கேமியோ ரோலில் அமீர்கான் நடிக்கும் போது, அவருக்காக ஒரு சூப்பர் ஹீரோ கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்தார் லோகேஷ். கூலி ரிலீசுக்கு பின்னர் அந்த படமும் டிராப் ஆகி இருக்கிறது. லோகேஷிடம் அமீர்கான் முழு ஸ்கிரிப்டையும் கேட்டதாகவும், ஆனால் லோகேஷ் அதை தர முன்வராததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படமும் கைவிடப்பட்டு இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக பிரம்மாண்ட படங்களில் இருந்து வெளியேறும் லோகேஷ், கைதி 2 படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

44
சிக்கலில் கைதி 2

ஆனால் தற்போது கைதி 2 படமே உருவாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. படத்தின் கதையில் கார்த்திக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்களாம். தற்போதைக்கு அந்தப் படம் உருவாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கைதி 2 உருவாகாவிட்டால் லோகேஷின் சினிமேட்டிக் யூனிவர்ஸே இழுத்து மூடப்பட வாய்ப்பு உள்ளது. கைதி 2 தான் எல்.சி.யூவின் மையப்புள்ளியாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தப் படம் ஆரம்பிக்கும் முன்னரே அதற்கு எண்டு கார்டு போட்டுவிட்டதாக பரவி வரும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories