தலைவாசல் பெயர்க் காரணம் தெரியுமா? உண்மையை சொன்ன சீனியர் நடிகர்!

Published : Jul 13, 2025, 11:09 AM IST

Reason Behind Thalaivasal Vijay : தனக்கு தலைவாசல் விஜய் என்று பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்து மூத்த நடிகரான தலைவாசல் விஜய் வெளிப்படையாக கூறியுள்ளார்.

PREV
15
தலைவாசல் விஜய் பெயர்க் காரணம்

Reason Behind Thalaivasal Vijay : கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருடைய இயற்பெயர் ஏ.ஆர் விஜயகுமார். தமிழ்மொழி மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் இவர் பல்வேறு நாடகங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் மூலமாகவும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி நடிகர் பாபு ஆண்டனி கொதிக்க மன்னனாக நடித்திருந்தார், அவருக்கு அந்த திரைப்படத்தில் குரல் கொடுத்ததும் தலைவாசல் விஜய் தான்.

25
தலைவாசல் விஜய் நடித்த படங்கள்

தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக பல நூறு திரைப்படங்களில் நடித்து சிறந்த முறையில் பயணம் செய்து வருகிறார். பொதுவாக நடிகர்களுடைய பிள்ளைகள் நடிகர்களாவது இயல்புதான். ஆனால் தலைவாசல் விஜய் அவர்களுடைய மகள் நடிப்புத் துறையை தேர்ந்தெடுக்காமல், விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

35
தலைவாசல் பெயர்க் காரணம் தெரியுமா?

கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரரான அஜித் என்பவருக்கும் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனாவிற்கும் திருமணம் நடைபெற்றது. நீச்சல் வீராங்கனை ஆகிய தலைவாசல் விஜய் அவர்களின் மூத்த மகள், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களின் வென்றுள்ளார். நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

45
தலைவாசல் விஜய் என்று பெயர் வர காரணம் என்ன?

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்திலிருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருக்கும் போது தலைவாசல் என்ற பெயர் பலகையை கண்டு காரை நிறுத்தி அந்த போர்டுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ஒரு முக்கியமான சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

நான் சேலத்திலிருந்து சென்னைக்கு டிராவல் செய்து கொண்டிருந்தேன். அப்போது தலைவாசல் என்ற போர்டை கண்டு காரை நிறுத்தினேன். இதுவரையில் எனது வாழ்க்கையில் நான் பார்க்காத ஊர் அது. அதனால், அந்த ஊரின் போர்டுக்கு அருகில் சென்று போட்டோ எடுத்துக் கொண்டேன். அப்போது தான் சிலர் என்னை சுற்றி வந்து நாங்கள் உங்களது மகளின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம் என்றார்கள்.

55
தலைவாசல் விஜய் இன்ஸ்டாகிராம்

ஆனால், எனக்கு அவர்களுக்கு பார்த்த ஞாபகம் இல்லை. அதில் ஒருவர் நீங்கள் நம்ம ஊரைச் சேர்ந்தவர் தானே, அப்படியிருக்கும் போது உங்க மகள் கல்யாணத்திற்கு வராம இருக்க முடியுமா என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. தலைவாசல் என்ற அடைமொழி தான் அதற்கு காரணம் என்று. மேலும், தலைவாசல் விஜய் என்று பெயர் வரக் காரணமே எனது முதல் படம் தலைவாசல் தான். கிராமப் புறங்களில் தான் இந்தியாவின் உயிர் ஒளிந்திருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த ஊரானது ஒரு படத்தின் பெயராக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories