வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பலதரப்பட்ட வேடங்களில் நடித்த வாடிகர் கோட்டா சீனிவாச ராவ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு பற்றி பார்க்கலாம்.
தெலுங்குத் திரையுலகின் தனித்துவமான நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) காலமானார். தெலுங்கு சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு முக்கியமானது. தமிழ் சினிமாவில் விக்ரம், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
25
கோட்டா ஶ்ரீனிவாச ராவ் vs தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் மட்டும் சாமி, குத்து, திருப்பாச்சி, ஜோர், தாண்டவம், தனம், லாடம், பெருமாள், கோ, சாது மிரண்டா, ஏய், காத்தாடி என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் விக்ரம் மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்தது தான் பிரமிக்க வைத்தது. அதிலேயும் பெருமாள் பிச்சை, சனியன் சகடை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று.
35
வில்லனாக மட்டுமல்ல, நகைச்சுவை வேடங்களிலும் கலக்கிய கோட்டா
தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக மிகக் கொடூரமான வில்லனாக நடித்தார். அதே நேரத்தில் குணச்சித்திர நடிகராக நேர்மறை வேடங்களிலும் நடித்தார். ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பா, தாத்தா, மாமா, பெரியப்பா எனப் பல வேடங்களில் நடித்தார். பாபு மோகனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மறக்க முடியாதவை. வெள்ளித்திரையில் நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்.
45
கோட்டா ஸ்ரீனிவாச ராவின் அரசியல் வாழ்க்கையை மாற்றிய `ப்ரதிகாடனா`
நடிப்பிற்காக 9 முறை நந்தி விருதுகள், SIIMA விருது (கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்) மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். 1999-ஆம் ஆண்டு விஜயவாடா கிழக்கு தொகுதியிலிருந்து MLA ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரையுலகிலும், சட்டமன்றத்திலும் சமமான ஈடுபாட்டுடன் செயல்பட்ட இவர், கலை மற்றும் சமூக சேவையிலும் முன்னோடியானவர்.
55
750-க்கும் மேற்பட்ட படங்கள்
1978-ஆம் ஆண்டு ‘பிரணம் கரீது’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஆனால் அதற்கு முன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாடக மேடையில் கலக்கியவர். வங்கி ஊழியராக இருந்தபோதும், மேடையில்தான் அவர் உண்மையான வாழ்க்கையை காண்பித்தார். மெதுவாக திரையுலகில் வில்லன், காமெடி, உணர்ச்சி மிகுந்த பாத்திரங்கள் என பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.