நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் தான் தற்போது டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளனர். ஏனெனில் இன்று காலை நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அனைவரும் தனது மகனை ஆசிர்வதிக்குமாறும் கேட்டிருந்தார்.
அருண் விஜய்யின் இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தில் உங்களது நடிப்பை என்ஜாய் பண்ணேன். உங்களது படிப்பும், நடிப்பும் சிறக்க வாழ்த்துக்கள்” என வாழ்த்தி பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது.