'ரிசல்ட் பத்தி கவலையே இல்லை' அஜித் 62 விக்னேஷ் சிவனுக்கு கைகொடுக்குமா?

Kanmani P   | Asianet News
Published : May 09, 2022, 03:54 PM IST

தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் 61 வது படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 படத்தில் இணையவுள்ளார்.

PREV
18
'ரிசல்ட் பத்தி கவலையே இல்லை' அஜித் 62 விக்னேஷ் சிவனுக்கு கைகொடுக்குமா?
VALIMAI

அஜித் மன அழுத்தத்திற்கு ஆள் பட்ட வக்கீலாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அதே கூட்டணியில் மீண்டும் நடித்த படம்  வலிமை.

28
VALIMAI

அஜித்தின் 60 வது திரைப்படமான வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தது.

 

38
Ajith

இரண்டரை ஆண்டுக்கு காத்திருப்பிற்கு பிறகு சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்த வலிமை வெளியாகி ரூ.200 கோடியை கடந்து சாதனை படைத்தது. 

48
AJITH 61

இதையடுத்து போனிகபூர், எச்.வினோத் கூட்டணியில் 61 வது படத்தில் இணைந்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

58
AJITH61

மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம். 

68
AJITH61

ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஜிப்ரான், எடிட்டர் விஜய் வேலுமணி, ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்புராயன் ஒப்பந்தமாகியுள்ள இதில் நாயகியாக அசுரன் புகழ் மஞ்சு வாரியார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

78
AJITH 62

இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நயன்தாரா நாயகியாகவுள்ளதாவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

88
AJITH 62

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விக்னேஷ் சிவன்,'என்னுடைய 100% பணியை அஜித் 62 படத்தில் கொடுப்பேன். அஜித் சாரை நான் திரையில் பார்த்து ரசித்து இருக்கேன். அவரை சந்திக்க 5 நிமிடம் கிடைத்தாலே ரொம்ப சந்தோசம். அவருடன் தினமும் பல மணி நேரங்கள் செலவழிக்க போகிறோம் என்பதும் மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி தோல்வி பற்றி எனக்கும் கவலையில்லை. அஜித் சார் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories